35 பந்தில் 61 ரன் விளாசிய இலங்கையின் ஹர்ஷிதா: துவம்சம் செய்த இமேஷா துலானி
வங்காளதேச மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்கள் குவித்தது.
சமரி அதப்பத்து 32 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் வங்காளதேசம் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி சில்ஹெட்டில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தெரிவு செய்ய இலங்கை அணி துடுப்பாடியது.
ஹாசினி பெரேரா 7 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 30 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடி கூட்டணி
அடுத்து இமேஷா துலானி மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரமா கூட்டணி அதிரடி காட்டியது. அணியின் ஸ்கோர் 147 ஆக உயர்ந்தபோது, இமேஷா துலானி (Imesha Dulani) 40 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் குவித்தது. சுல்தானா காதுன் 2 விக்கெட்டுகளும், ரபேயா மற்றும் மருஃபா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |