லண்டனில் காணமல் போன இளைஞனை தேம்ஸ் நதியில் தேடும் பொலிசார்! தவிக்கும் பெற்றோர்: வெளியான புகைப்படம்
லண்டனில் இரவு நேரத்தில் காணமல் போன 20 வயது மதிக்கத்தக்க மாணவனை தேம்ஸ் நதியில் பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Lambeth-ஐ சேர்ந்தவர் Harvey Parker. 20 வயது மதிக்கத்தக்க இளைஞரான இவர் கடந்த 17-ஆம் திகதி கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார்.
அதன் பின் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத காரணத்தினால், மாணவனின் பெற்றோர் மகனை கண்டுபிடிக்க உதவும் படி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கடந்த வெள்ளிக் கிழமை(டிசம்பர் 17-ஆம் திகதி) அதிகாலை 2.15 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள Heaven இரவு விடுதியில் இருந்து Harvey Parker வெளியேறியுள்ளார். அதன் பின் இவர் வீட்டிற்கு திரும்பாத காரணத்தினால் பெற்றோர் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
அவருடைய குடும்பத்தினர் கிறிஸ்துமஸுக்குள் அவர் திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில், Harvey Parker-ஐ தேம்ஸ் நதிக்கரையில் பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் கடைசியாக இரவு விடுதியில் காணப்பட்ட அவர், அதன் பின் குறித்த நதியை நோக்கி நடந்து செல்வதை சிசிடிவி காட்சிகள் உறுதி செய்துள்ளன. இதனால் அவர் தண்ணீரில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடல் துவங்கியுள்ளது.
மத்திய தெற்கு பாதுகாப்புப் பிரிவின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் Lucy O'Connor கூறுகையில், காணமல் போன இளைஞனை கண்டுபிடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். கடல் காவல் பிரிவில் உள்ள எங்கள் சக ஊழியர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.
நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகள் குறித்து Harvey Parker குடும்பத்திற்கு தெரிவித்து வருகிறோம். இந்த துயரமான நேரத்தில் நானும் எனது சக ஊழியர்களும் அவர்களுடன் இருக்கிறோம்.
விசாரணை நடைபெற்று வருவதால் உண்மை தன்மை அறியாமல் எந்த ஒரு ஊகங்களையும், ஊடகங்கள் தவிர்க்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், Harvey Parker குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 101-ஐ அழைக்கும் படியும் அல்லது @MetCC-க்கு டுவிட் செய்து, CAD 3134/18DEC21-ஐ மேற்கோள் காட்டி குறிப்பிடும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.