வேலை கேட்ட பெண்.. நிலவுக்கு அனுப்புவோம் என கிண்டலாக பதிலளித்த முதலமைச்சர்
இந்திய மாநிலம் ஹரியானாவில், வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலை கேட்டு கோரிக்கை வைத்த பெண்ணிடம், நிலவுக்கு அனுப்புவோம் என்று அமமாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கிண்டலாக பேசியதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் கிண்டல் பதில்
ஹரியாணா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர், தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், "அடுத்த முறை சந்திரயான் -4 விண்கலத்தில் உங்களையும் சேர்த்து நிலவுக்கு அனுப்புவோம்" என கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதையடுத்து, நிகழ்ச்சியில் உள்ளவர்கள் சத்தமாக சிரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி கண்டனம்
இந்த வீடியோவை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஆம் ஆத்மி கட்சி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பகடி செய்கிறார். இது ஒரு வெட்கக்கேடு. இந்த பெண் செய்த குற்றம் என்னவென்றால், வேலைக்காக தொழிற்சாலை கேட்டது தான்.
"अगली बार #Chandrayaan जाएगा तो उसमें तुमको भेज देंगे।"
— AAP (@AamAadmiParty) September 7, 2023
धिक्कार है ऐसे मुख्यमंत्री पर। जिन्हें जनता ने सेवा करने के लिए चुना था आज वही जनता का मज़ाक़ उड़ा रहे हैं।
महिला का अपराध इतना था कि उसने रोजगार के लिए फैक्ट्री मांगी
यही मांग अगर मोदी जी के अरबपति मित्रों ने अपने… pic.twitter.com/OERfbfaCGt
இதுவே மோடியின் பில்லியனர் நண்பர்கள் கேட்டால் உடனே அவர்களுக்கு மொத்த அரசையும் மனோகர் லால் கட்டார் சேவைக்காக கொடுத்திருப்பார்" என்று பதிவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |