புயல்வேக பந்துவீச்சு.. இரண்டாக உடைந்த ஸ்டெம்ப்! வைரல் வீடியோ
பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி வீசிய பந்தால் ஸ்டெம்ப் இரண்டாக உடைந்தது.
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் லங்காஷயர் - க்ளூசெஸ்டர்ஷைர் அணிகள் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்சில் க்ளூசெஸ்டர்ஷைர் அணி 252 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹசன் அலி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய லங்காஷயர் 556 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய க்ளூசெஸ்டர்ஷைர் 86 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 61 எடுத்திருந்தபோது ஜேம்ஸ் பிரேசிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசன் அலி பந்து வீசினார். புயல் வேகத்தில் வீசப்பட்ட அந்த யார்க்கர் பந்து மிடில் ஸ்டெம்பை தாக்கியதில் இரண்டாக உடைந்தது.
“Oh my word!” ?
— Lancashire Cricket (@lancscricket) April 23, 2022
We’ll have to get another one of those, @RealHa55an! ?
? #RedRoseTogether pic.twitter.com/XQO4reizR1
இந்த விக்கெட் வீழ்ந்த வீடியோவை லங்காஷயர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
27 வயதாகும் ஹசன் அலி, 19 டெஸ்ட் போட்டிகளில் 74 விக்கெட்டுகளையும், 58 ஒருநாள் போட்டிகளில் 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.