இந்திய அணி எங்கள் நாட்டிற்கு வரவில்லை என்றால் இதுதான் - பாகிஸ்தான் வீரர் சூளுரை
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு விளையாட வரவில்லை என்றாலும், தங்கள் நாட்டிலேயே தொடர் நடைபெறும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மறுப்பு
2025ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்தது.
மேலும், ஐசிசி-யிடம் துபாய் அல்லது இலங்கையில் தொடரை நடத்துமாறு பிசிசிஐ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுவரை இதுகுறித்து ஐசிசி எந்த முடிவும் எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடந்தால் பங்கேற்காது என பிசிசிஐ தெரிவித்தது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹசன் அலி கருத்து
இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி (Hasan Ali) இந்திய அணி பங்கேற்காதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''நாங்கள் இந்தியாவிற்கு விளையாட செல்கிறோம் என்றால், அவர்களும் பாகிஸ்தானுக்கு வர வேண்டும். அரசியலில் இருந்து விளையாட்டு விலகி இருக்க வேண்டும் என்று எண்ணற்ற முறை பலர் கூறியுள்ளனர்.
ஆனால், இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்திய வீரர்கள் பலர் பாகிஸ்தானில் விளையாட விரும்புவதாக பேட்டிகளில் கூறியுள்ளனர். எனவே அணி வர விரும்பவில்லை என்று அர்த்தமல்ல; அவர்கள் நிச்சயமாக செய்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக அவர்கள் தங்கள் சொந்த கொள்கைகள், நாடு மற்றும் வாரியத்தை கருத்தில் கொள்ள வேண்டும்'' என்றார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |