18 பந்தில் அரைசதம்..64 ஓட்டங்களுடன் 4 விக்கெட்..ருத்ர தாண்டவமாடிய இலங்கை வீரர்
லங்கா பிரீமியர் லீக் தொடரில் பி-லவ் கண்டி அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹசரங்கா ருத்ர தாண்டவம்
பல்லேகேலேவில் நடந்த போட்டியில் பி-லவ் கண்டி மற்றும் காலே டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பி-லவ் கண்டி அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய கேப்டன் வணிந்து ஹசரங்கா 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் 27 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் குவித்தார்.
பக்ஹர் ஜமான் 45 ஓட்டங்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
கண்டி அணி மிரட்டல் வெற்றி
பின்னர் களமிறங்கிய காலே டைட்டன்ஸ் அணி ஹசரங்கா, நுவன் பிரதீப், முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக லஹிரு சமரக்கூன் 36 ஓட்டங்களும், அக்ஷன் பிரியன்ஜன் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.
மாயாஜால சுழலில் மிரட்டிய ஹசரங்கா 17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
B-Love Kandy treats their home crowd to the season’s first 200 total!#LPL2023 #LiveTheAction pic.twitter.com/ufaD9rrzuq
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 8, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |