கலாய்த்த பாகிஸ்தான் வீரர்.,அவரது ஸ்டைலிலேயே ஹசரங்கா பதிலடி: பின் கட்டியணைத்த வீடியோ
ஆசியக் கிண்ணத்தின் நேற்றையப் போட்டியில், ஹசரங்கா மற்றும் அப்ரார் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
கிளீன் போல்டு
அபுதாபியில் நேற்று நடந்த ஆசியப் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
This is Absolute Cinema .. 🤣#PAKvsSL #AsiaCup2025 pic.twitter.com/iZKs7WRisF
— 🖤 Dr. Sana 🖤 (@Blackmemex0) September 23, 2025
இப்போட்டியில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது (Abrar Ahmed) ஓவரில் வணிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) கிளீன் போல்டு ஆனார்.
அப்போது ஹசரங்கா விக்கெட் வீழ்த்திய பின் செய்யும் ஸ்டைலை அவர் முன்னே அப்ரார் செய்துகாட்டி கிண்டல் செய்தார்.
ஹசரங்கா பதிலடி
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தின்போது ஹசரங்கா ஓவரில் சைம் அயூப் (Saim Ayub) கிளீன் போல்டு ஆனார்.
ஹசரங்கா உடனே அப்ராரின் ஸ்டைலை செய்துகாட்டி கிண்டல் செய்து பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதே சமயம் ஹசரங்காவும், அப்ராரும் போட்டிக்கு பின் கட்டியணைத்துக் கொண்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Hasaranga and Abrar Ahmed having banter and showing sportsmanship after the match. Something the Indian cricket team can never learn!! pic.twitter.com/T7ouuMjURx
— Abdullah (@AbdullahSays99_) September 23, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |