காயத்திலிருந்து மீண்டு வந்து 7 விக்கெட்கள் வீழ்த்திய ஹசரங்கா! ஒட்டுமொத்தமாக வீழ்ந்த ஜிம்பாப்பே
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது.
ஜிம்பாப்பே அணி முதலில் பேட்டிங்கை தொடங்கி 40 ஓட்டங்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.
A roaring comeback! ?
— ICC (@ICC) January 11, 2024
Wanindu Hasaranga takes a five-wicket haul on his comeback ?#SLvZIM ?: https://t.co/1h6auTlj47 pic.twitter.com/VDkJGmdoB5
அதனைத் தொடர்ந்து மழை நின்றதால் 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் ஆடிய ஜிம்பாப்பே, வனிந்து ஹசரங்காவின் மாயாஜால சுழலில் 96 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக Gumbie 29 (34) ஓட்டங்கள் எடுத்தார். ஹசரங்கா 19 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இது ஆடவர் கிரிக்கெட்டில் 5வது சிறந்த பந்துவீச்சாக பதிவாகியுள்ளது.
The fifth-best bowling figures in men's ODIs ?
— ICC (@ICC) January 11, 2024
What a performance by Wanindu Hasaranga! #SLvZIM ?: https://t.co/cQKkx7IlfE pic.twitter.com/Z9RdTiZih0
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |