இலங்கை டி20 அணி அறிவிப்பு: ஹசரங்கா, இஷான் மலிங்கா இல்லை
ஜிம்பாப்பேவுக்குக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்கா
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாள் ஹராரேயில் நடக்கிறது.
இந்த நிலையில், டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், தனது தொடை தசைநார் காயத்திலிருந்து தொடர்ந்து மீண்டு வரும் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) டி20 அணியில் இடம்பிடிக்கவில்லை.
இது ஆசியக் கிண்ணத்திற்கு முன்னதாக விளையாடும் இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஒருவேளை ஹசரங்கா ஆசியக் கிண்ணத் தொடருக்கான அணியில் இடம்பெறத் தவறினால், மஹீஷ் தீக்ஷணா மற்றும் துனித் வெல்லலகே இடம்பெறலாம்.
மேலும், வங்காளதேச அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு இஷான் மலிங்கா(Eshan Malinga) நீக்கப்பட்டுள்ளார்.
விஷென் ஹலம்பகே (Vishen Halambage), கமில் மிஷாரா (Kamil Mishara) ஆகியோர் இந்த தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விபரம்
- சரித் அசலங்கா (அணித்தலைவர்)
- பதும் நிசங்கா
- குசால் மெண்டிஸ்
- குசால் பெரேரா
- நுவனிந்து பெர்னாண்டோ
- கமிந்து மெண்டிஸ்
- கமில் மிஷாரா
- விஷென் ஹலம்பகே
- தசுன் ஷானகா
- துனித் வெல்லலாகே
- சமிகா கருணாரத்னே
- மஹீஷ் தீக்ஷணா
- துஷான் ஹேமந்தா
- மதீஷா பத்திரனா
- நுவன் துஷாரா
- துஷ்மந்தா சமீரா
- பினுரா பெர்னாண்டோ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |