ஐசிசி ஒருநாள், டி20 தரவரிசைப்பட்டியல் வெளியீடு: கெத்து காட்டும் ஒற்றை இலங்கை வீரர்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் கேப்டன் முதலிடம்
ஐசிசி வெளியிட்ட புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் துடுப்பாட்ட வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய வீரர் சுப்மன் கில் ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட் முதலிடத்தில் உள்ளார்.
துடுப்பாட்ட, பந்துவீச்சாளர்கள் டாப் 10 பட்டியலில் இலங்கை வீரர் எவரும் இடம்பெறவில்லை. ஆனால், ஆல்-ரவுண்டர் பட்டியலில் இலங்கையின் வணிந்து ஹசரங்கா 233 புள்ளிகளுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார்.
டி20 தரவரிசைப் பட்டியல்
டி20 துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 889 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர்கள் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் முறையே 2, 3ஆம் இடங்களைப் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரஷீத் கான் (ஆப்கான்) முதலிடமும், ஹேசல்வுட் (அவுஸ்திரேலியா) இரண்டாம் இடமும் பிடித்துள்ளார்.
இலங்கை வீரர்கள் வணிந்து ஹசரங்கா (686), மஹீஷ் தீக்ஷணா (684) முறையே 3வது, 4வது இடங்களை பிடித்துள்ளனர்.
ICC
ஒரே இலங்கை வீரர்
ஆல்ரவுண்டர் பட்டியலில் ஷகிப் அல் ஹசன் முதலிடமும், ஹர்திக் பாண்டியா இரண்டாம் இடமும், முகமது நபி மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
இதில் இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா (182 புள்ளிகள்) 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டி20 என இரண்டிலும் டாப் 10 வரிசையில் இடம்பிடித்த ஒரே இலங்கை வீரர் ஹசரங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |