முதல் இடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்த இலங்கை வீரர்! ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் டாப் 10ல் ஒரு இந்திய வீரர் கூட இல்லை
டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை இளம் புயல் வனிந்து ஹசரங்கா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் நங்கூரம் போட்டு உட்கார்ந்துள்ளார்.
இரண்டாமிடத்தில் தென்னாப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்ஷி 784 புள்ளிகளுடன் உள்ளார்.
மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஆடம் ஷம்பா உள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஜோஸ் ஹாசில்வுட் 705 புள்ளிகளுடன் புதிய பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.