உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை தோல்வியுற்றது குறித்து ஹசரங்கா கருத்து
தொழில்முறை துடுப்பாட்ட வீரர்களாக ஆடுகளத்தை குறை கூறக்கூடாது என இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார்.
வெளியேறிய இலங்கை
நடப்பு டி20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றியுடன் வெளியேறியது.
இந்த நிலையில் அணித்தலைவர் வனிந்து ஹசரங்கா தோல்வி குறித்து பேசியுள்ளார்.
ஹசரங்கா கருத்து
அவர் கூறுகையில், ''ஒரு போட்டியில் தோல்வியடையும்போது, ஆடுகளங்கள் மற்றும் பிற விடயங்களைக் குறை கூறலாம். ஆனால் தொழில்முறை துடுப்பாட்ட வீரர்களுக்கு அது ஒரு நல்ல விடயம் அல்ல.
பிற அணி கூட ஒரே ஆடுகளத்தில் விளையாட வேண்டும். நாங்கள் விளையாடும் முறையை மாற்றுவது எங்கள் வேலை. நாங்கள் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.
அந்த பொறுப்பை ஏற்க வேண்டும். நாங்கள் அந்த மாற்றங்களை செய்யவில்லை மற்றும் மாற்றியமைக்கவில்லை, அது எங்கள் முக்கிய குறைபாடு'' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |