சிக்ஸர்களை பறக்கவிட்ட இலங்கை வீரர் ஹசரங்க! அதிவேக அரைசதம்
வனிந்து ஹசரங்க 69 ஓட்டங்களுடன், 18 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்
எஸ்.எல்.சி ப்ளூஸ் அணி தரப்பில் சுமிந்த லக்ஷன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
இலங்கை கிரிக்கெட் லீக் தொடரில் வனிந்து ஹசரங்க அதிரடியாக 41 பந்துகளில் 69 ஓட்டங்கள் விளாசினார்.
எஸ்.எல்.சி ரெட்ஸ் மற்றும் எஸ்.எல்.சி ப்ளூஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
PC: Twitter
முதலில் ஆடிய எஸ்.எல்.சி ரெட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் குசால் மெண்டிஸ் 60 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசினார்.
வனிந்து ஹசரங்க அதிரடியில் மிரட்டினார். அவர் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்தார்.
PC: Twitter
பின்னர் ஆடிய எஸ்.எல்.சி ப்ளூஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக சதீர சமரவிக்ரம 40 ஓட்டங்களும், லஹிரு உதார 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: Twitter