ஆப்கானை அலறவிட்ட ஹசரங்கா! மிரட்டலான பந்துவீச்சு
நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஹசரங்கா 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
ஹசரங்கா 51 டி20 போட்டிகளில் 84 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்கா 13 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
பிரிஸ்பேனில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 போட்டி நடந்து வருகிறது. முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 144 ஓட்டங்கள் எடுத்தது.
Powerplay done!
— ICC (@ICC) November 1, 2022
Afghanistan get off to a steady start, scoring 42/0 ?#T20WorldCup | #AFGvSL |?: https://t.co/OG41aOOU6f pic.twitter.com/GgbWYKEOpk
சுழற்பந்து வீச்சில் மிரட்டிய இலங்கையின் ஹசரங்கா 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
27 ஓட்டங்கள் எடுத்திருந்த உஸ்மான் கானி இலங்கை கேப்டன் ஷானாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் ரஷித் கானை போல்டு செய்த ஹசரங்கா, அதே ஓவரில் முஜீப்பை ஆட்டமிழக்க செய்தார்.