சுழற்பந்து வீச்சில் மிரட்டிய ஹசரங்கா.. இறுதிவரை போராடிய இலங்கை
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி போராடி தோல்வியுற்றது.
பல்லேகேலேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களை குவிந்தது. குணாதிலக, நிசங்கா அரைசதம் விளாசினர். குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரலேய அணியில் பின்ச், ஸ்டோய்னிஸ் ஆகியோர் 44 ஓட்டங்கள் எடுத்தனர். ஸ்டீவன் ஸ்மித் 53 ஓட்டங்களில் வெளியேறினார்.
Photo Credit: AFP
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்த்த நிலையில், மறுபுறம் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ஓட்டங்கள் அடித்து நொறுக்கினார். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சில் மிரட்டிய ஹசரங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Photo Credit: AFP/Getty Images
அவுஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ஓட்டங்கள் எடுத்து DLS முறையில், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Photo Credit: AFP