ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி பிரித்தானியா வந்தது எப்படி? திகிலூட்டும் அனுபவத்தை பகிர்ந்த பெண்
அரசியல் ஆர்வலரும் தொழிலதிபருமான ஹசினா சையத், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி பிரித்தானியா வந்த திகிலூட்டும் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தலிபான்கள் காபூலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ஆகஸ்ட் 15 (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்தள்ளதால், அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நீடித்து வருகிறது.
இதுவரை காபூல் விமான நிலையத்திற்கு உள்ளே வெளியே என சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதால், அரசியல் ஆர்வலரும் தொழிலதிபருமான ஹசினா சையத் பிரித்தானியா புறப்பட்ட விமானத்தில் ஏறி தப்பிச்சென்றுள்ளார்.
பிரித்தானியா வந்தடைந்த சையத், காபூலில் இருந்து தான் தப்பிய திகிலூட்டும் அனுபவத்தை பகிரிந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்ததாக திடீரென அழைப்பு வந்ததை விவரித்த சையத், நீங்கள் உடனே உங்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓட வேண்டும் என்று கூறப்பட்டது.
எனக்கு அழைப்பு வந்தபோது நான் என் ஓட்டுநருடன் காரில் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தேன்.
The chilling phone call told her: "you have to get out. Take your things and run!"
— Kay Burley (@KayBurley) August 19, 2021
Hassina Syed describes her "chaotic" and "terrifying" escape from #Kabul. RC#KayBurley pic.twitter.com/oCa4L99Ebc
நான் என்னுடன் எதையும் கொண்டு வரவில்லை. என்னிடம் ஒரு சிறிய பையும், எனது பயணத்திற்கு தேவையான ஆவணங்கள் மட்டுமே இருந்தன.
நான் என் டிரைவரிடம் வீட்டிற்குச் செல்லச் சொன்னேன். அவர் காரை சாலையிலே விட்டுவிட்டு ஓட வேண்டியிருந்தது என சையத் கூறினார்.
நாட்டை விட்டு தப்பித்த அனுபவம் குறித்து கூறிய சையத், எனக்கும் அங்கிருந்த ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியர்களுக்கும் இது மிகவும் குழப்பமான மற்றும் திகிலூட்டும் சூழ்நிலையாக இருந்தது.
ஆனால் இப்போது விமான நிலையத்தில் ஆப்கானியர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது, ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மோசமடைந்து வருகிறது என்று சையத் கூறினார்.