அருந்ததி படத்தில் வரும் கந்தர்வகோட்டை.., இப்போ பிரபல சுற்றுலாத்தலம்: எங்கு இருக்கு தெரியுமா?
அருந்ததி படத்தில் வரும் கந்தர்வகோட்டை பேய் பங்களா எங்கு இருக்கு தெரியுமா? அதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.
அருந்ததி படத்தில் வரும் பேய் பங்களா பார்ப்பவர்களுக்கு பயமுறுத்தும் வகையில் இருக்கும். இந்த பங்களா உண்மையில் ஒரு சுற்றுலாத்தலம் ஆகும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பனகனப்பள்ளி அரண்மனை தான் இது. இது பனகனப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4.25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பிஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா இந்த பனகனப்பள்ளி கோட்டையை 1601 இல் ராஜா நந்த சக்கரவர்த்தியிடம் இருந்து கைப்பற்றினார்.
கோட்டையுடன், சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களும் சுல்தானால் போற்றப்பட்ட தளபதி சித்து சும்பலின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர் அவற்றை 1665 வரை தொடர்ந்து பாதுகாத்து வந்தார்.
பின்னர் முஹம்மது பெக் கான்-இ ரோஸ்பஹானிக்கு இந்த பனகனப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதி மரியாதையாக வழங்கப்பட்டது. தற்போது இந்த அரண்மனை ஆந்திராவில் பிரபலமான சுற்றுலாத்தளமாக விளங்கி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |