உங்கள் மீது இரக்கமா? வாய்ப்பே இல்லை: ஜேர்மனியை கேலி செய்யும் பிரித்தானியர்கள்

Germany
By Balamanuvelan Aug 09, 2021 11:30 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதற்கான காரணங்களில் ஒன்று, அது ஆண்டுதோறும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெருந்தொகை ஒன்றை செலுத்த வேண்டியிருந்ததாலேயே என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம்.

அதாவது, பிரெக்சிட் நடக்க அதுவும் ஒரு காரணம்...

இப்போது, அதேபோன்றதொரு சூழ்நிலையை ஜேர்மனியும் சந்தித்துவருகிறது.

அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தவேண்டும். தேவையிலிருக்கும் நாடுகளுக்கு உதவ அந்த தொகை பயன்படுத்தப்படும்.

அதன்படி, ஜேர்மனி கடந்த ஆண்டு மட்டுமே 16.4 பில்லியன் பவுண்டுகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தியுள்ளது. ஜேர்மனியுடன் ஒப்பிடும்போது, பிரான்ஸ் செலுத்தியது தொகை 8 பில்லியன் பவுண்டுகள் மட்டுமே.

உங்கள் மீது இரக்கமா? வாய்ப்பே இல்லை: ஜேர்மனியை கேலி செய்யும் பிரித்தானியர்கள் | Have Mercy On You No Chance

அப்படி செலுத்தப்பட்ட தொகையால் பயனடைந்த நாடுகளில் அதிக பயனடைந்த நாடு போலந்து. அது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 10.5 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுள்ளது. ஹங்கேரியும் அதேபோல் பெருந்தொகை ஒன்றை பெற்றுள்ளது.

இந்த இரண்டு நாடுகளும், தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்தும் தொகையைவிட அதிகம் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற்றுள்ளன. அத்துடன், இந்த இரண்டு நாடுகள் மீதும் ஐரோப்பிய ஒன்றிய விதிகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு வேறு உள்ளது. 

இப்படிப்பட்ட ஒரு சூழலில், இப்படி விதிகளுக்கு அடங்காத நாடுகளுக்கு செலவிடுவதற்காக பட்ஜெட்டில் பெரும் தொகை ஒன்றை ஜேர்மனி ஒதுக்கியுள்ள விடயம், ஜேர்மன் அரசியல்வாதிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

உங்கள் மீது இரக்கமா? வாய்ப்பே இல்லை: ஜேர்மனியை கேலி செய்யும் பிரித்தானியர்கள் | Have Mercy On You No Chance

இதைத்தான் பிரித்தானியர்கள் இப்போது கேலி செய்கிறார்கள். தங்கள் நாட்டிலிருந்து பெரிய தொகையை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பெரிதாக ஒன்றையும் செய்யாத ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்துதான் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. இப்போது அதே நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியர்கள் சமூக ஊடகங்களில் ஜேர்மனியை கேலி செய்து வருகிறார்கள்.

ஜேர்மனியின் நிலை கண்டு அதன் மீது இரக்கப்படுவதா? வாய்ப்பேயில்லை என்கிறார் ஒரு பிரித்தானியர்.

மற்றொரு பிரித்தானியரோ, கேட்ட போதெல்லாம் வாரு வாரி வழங்கிய வள்ளலான பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதே உங்களுக்குத் தெரியாதா என்கிறார் கிண்டலாக.

உங்கள் மீது இரக்கமா? வாய்ப்பே இல்லை: ஜேர்மனியை கேலி செய்யும் பிரித்தானியர்கள் | Have Mercy On You No Chance

இதனால்தான் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினோம், இல்லையா என்கிறார் வேறொருவர்.

இப்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்திருந்தால், இந்த ஆண்டு நாம் 14 பில்லியன் பவுண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டியிருந்திருக்கும், நல்ல வேளை தப்பினோம் என்கிறார் மற்றொருவர். இப்படியே பிரித்தானியர்கள் ஆளாளுக்கு சமூக ஊடகங்களில் ஜேர்மனியை கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். 

உங்கள் மீது இரக்கமா? வாய்ப்பே இல்லை: ஜேர்மனியை கேலி செய்யும் பிரித்தானியர்கள் | Have Mercy On You No Chance

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US