சுவிட்சர்லாந்தில் கார் வைத்திருக்கும் அகதிகள் சிலருக்கு உருவாகியுள்ள சிக்கல்
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் உக்ரைன் அகதிகள் சிலருக்கு, கார் வைத்திருப்பது புதிய பிரச்சினை ஒன்றை உருவாக்கியுள்ளது.
கார் வைத்திருந்தால் அரசு உதவி கிடையாது
அதாவது, இந்த உக்ரைன் அகதிகள் அரசு உதவி கோரும் பட்சத்தில், அவர்கள் ஏதாவது சொத்து வைத்திருந்தால், அரசு உதவி கோருவதற்கு முன் அந்த சொத்துக்களை விற்பனை செய்துவிடவேண்டும் என விதி உள்ளது.
BBC
குறிப்பாக, Vaud மாகாண அதிகாரிகள், கார் வைத்திருக்கும் அகதிகளை குறிவைத்துள்ளார்கள். ஜெனீவாவில் இந்த நிலைமை இல்லை.
காரை இழக்க விரும்பாத அகதிகள்
ஆனால், தங்கள் காரை இழக்க உக்ரைன் அகதிகளுக்கு விருப்பம் இல்லை. பலர், தங்கள் காரை தங்களால் விற்க முடியாது என்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் அந்தக் காரின் உண்மையான சொந்தக்காரர்கள் அல்ல!
The New York Times
அதாவது, அந்தக் காரின் உரிமையாளர் இன்னும் உக்ரைனில் இருக்கிறார். இவர்கள் அந்தக் காரை லீஸுக்கு எடுத்திருக்கிறார்கள். ஆக, அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பும்போது, அந்தக் காரை அவர்கள் தங்களுடன் கொண்டு செல்வது அவசியமாகிறது.
அத்துடன், தங்கள் காரின் உண்மையான மதிப்பை விட, சுவிஸ் அதிகாரிகள் அவற்றின் மதிப்பை அதிக மதிப்புடையதாக கருதுவதாக உக்ரைன் அகதிகள் கருதுகிறார்கள்.