மும்பைக்கு குடியேறிவிட்டீர்களா?ரசிகரின் கேள்விக்கு சூர்யா அளித்த பதில்!
நடிகர் சூர்யா 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் , நந்தா , காக்க காக்க , பிதாமகன், பேரழகன், வேல் , வாரணம் ஆயிரம் ஏழாம் அறிவு , போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.
நடிகர் சூர்யா அடுத்து வெளிவரும் ''கங்குவா'' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு அடுத்து அவர் ''சுதா கொங்காரா'' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா தன் ரசிகர்களை சென்னையில் சந்தித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.அதில் ஒரு ரசிகர் ''நீங்கள் ஏன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறுனீர்கள்'' என்று கேள்வி எழுப்பினர்.
சூரியா அளித்த பதில்!
அதற்கு சூர்யா நான் நிரந்தரமாக குடியேறவில்லை என்று கூறினார்,மேலும் என் மகன் தேவ் மற்றும் என் மகள் தியா மும்பையில் படிப்பதால், அவர்களை சந்திக்க நான் அடிக்கடி மும்பைக்கு சென்றுவருவதாக கூறியுள்ளார். மேலும் தான் சென்னையில் தான் வசித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |