பெண்கள் குறித்து சீமான் பேசிய வீடியோவை இன்னும் சரியாக பார்க்கவில்லை: காளியம்மாள்
பெண்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோவை பார்க்கவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் கூறியுள்ளார்.
காளியம்மாள் பேசியது
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
இதனை விசாரித்த நீதிமன்றம், சீமானை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றும், விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனிடையே, நடிகை விஜயலட்சுமி குறித்து சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களை சீமான் இழிவாக பேசி வருகிறார் என்று அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "சம்மனை வீட்டில் கொடுத்திருக்கலாம். அதை இவ்வளவு பெரிய விஷயமாக மாறியிருக்க தேவையில்லை. இந்த விடயத்தை அரசு அதிகாரி நேர்மையான முறையில் கையாண்டிருக்க வேண்டும்" என்றார்.
மேலும், பெண்கள் குறித்து சீமான் இழிவாக பேசியது தொடர்பான கேள்விக்கு, "பெண்கள் குறித்து சீமான் பேசிய வீடியோவை இன்னும் சரியாக பார்க்கவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |