800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை: பாரிய செலவில் புனரமைப்பு
Haverfordwest castle in refurb work: வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை புனரமைக்கப்பட உள்ளது.
வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை ஒன்றை, முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற பாரிய அளவில் செலவு செய்யப்பட உள்ளது.
800 ஆண்டுகள் பழமையான கோட்டை
வேல்ஸில் உள்ள பெம்ப்ரோஷையரில் Cleddau நதியின் அருகேயுள்ள குன்றின் உச்சியில் Haverfordwest கோட்டை அமைந்துள்ளது.
1188-ஆம் ஆண்டில் இந்தக் கோட்டை வெறும் மரம் மற்றும் மண்ணால் கட்டப்பட்டது. 800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டை, பல ஆண்டுகளாக நடந்த பல்வேறு போர்கள் மற்றும் சண்டைகளில் இருந்து தப்பிப் பிழைத்தது.
என்றாலும், இதன் உள் முற்றம் மற்றும் சுற்றுச்சுவரின் எலும்புக்கூடும், பல கோபுரங்களும் இன்னும் எஞ்சியுள்ளன. சிதைந்த காரணத்தால் இக்கோட்டை கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இதனை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, பெம்ப்ரோஷையர் கவுண்டி கவுன்சிலின் நிதியுதவியுடன் 17.7 மில்லியன் பவுண்ட் செலவிடப்படுகிறது.
மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்போது ஹேவர்ஃபோர்ட்வெஸ்ட் கோட்டை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று டைம் அவுட் செய்தி வெளியிட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |