ஆரோக்கியமான கூந்தலுக்கு இயற்கை முறை Hair serum: வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?
Hair serum முடியை வலுப்படுத்த மற்றும் பிரகாசமாக்க உதவுகிறது. மேலும் இது முடி உதிர்தலை குறைக்க செய்கிறது.
இந்த இயற்கை முறை Serum கூந்தலுக்கு பிரகாசத்தை அளிக்கவும், கூந்தலை சுற்றுப்புற மாசிலிருந்து உண்டாகும் பாதிப்பையும் தடுக்க செய்கிறது.
ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும் இந்த Hair serum-ஐ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 10
- துளசி இலை- 10
- ரோஜா இதழ்- 8
- வெட்டி வேர்- 5
- தண்ணீர்- 1 டம்ளர்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- வைட்டமின் இ காப்ஸ்யூல்- 2
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது அதில் செம்பருத்தி இலை, துளசி, ரோஜா இதழ் மற்றும் வெட்டிவேர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
அதன் பின் அடுப்பை அனைத்து ஆறவைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும். வடிகட்டிய தண்ணீர் நன்கு நிறம் மாறி வந்திருக்கும்.
அதில் கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் இ காப்ஸ்யூல் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேகரித்து தலைக்கு குளித்தவுடன் கொஞ்சம் ஈரமாக இருக்கும்பொழுது தலையில் ஸ்பிரே செய்து கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதனால் முடி உதிர்வை தடுத்து மென்மையான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |