தேர்வெழுத வந்த பெண்ணின் ஹால் டிக்கெட்டை தூக்கிச் சென்ற பருந்து.., கடைசியில் நடந்த ட்விஸ்ட்
அரசு தேர்வு எழுத வந்த பெண்ணின் ஹால் டிக்கெட்டை பருந்து ஒன்று தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான கேரளா, காசர்கோடு பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் அரசு ஊழியர் துறை தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வுக்கு முன்பாக காலை 7.20மணி அளவில் பெண் ஒருவர் படித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் வந்த பருந்து ஒன்று பெண்ணின் ஹால் டிக்கெட்டை தூக்கிச் சென்றது. பின்னர் அது ஹால்டிக்கெட்டை பிடித்தபடி பள்ளியின் மேல் தளத்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டது.
அப்போது கீழே இருந்த நபர்கள் கூச்சலிட்ட போதும் அது அசையாமல் ஹால் டிக்கெட்டை பிடித்துக் கொண்டிருந்தது. பின்னர், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக இறுதியில் ஹால்டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து பருந்து பறந்து சென்றது.
இதனால் அந்த பெண் சரியான நேரத்தில் தேர்வு எழுத முடிந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |