பாபர் அசாம் கோலியைப் போலில்லை! வெளிப்படையாக கூறிய மேத்யூ ஹைடன்
பாகிஸ்தானின் பேட்டிங் ஆலோசகரும், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான மேத்யூ ஹைடன், கோலி, பாபர் அசாம் இடையே ஒப்பீடுகள் குறித்து விவரித்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான ஒப்பீடு குறித்து மேத்யூ ஹைடன் கூறியதாவது, கோஹ்லியைப் போலல்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மிகவும் ஆரவாரமாக இல்லை, மேலும் ஆடுகளத்தில் அமைதியான நடத்தையைப் பேணுகிறார்.
பாபர் மிகவும் உறுதியான மற்றும் நிலையாக விளையாடக்கூடியவர். அவர் மிகவும் ஆரவாரமானவர் அல்ல.
கோலியும், பாபரும் எதிர்மாறாக இருக்கிறார்கள். பாபர் பெரும்பாலான நேரங்களில் மிகவும் அமைதியாக இருக்கிறார், மேலும் அவரது கேப்டன்சியில் மற்றும் பேட்டிங்கில் உன்னிப்பாக இருக்கிறார்.
அதேநேரத்தில் கோலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர் மற்றும் களத்தில் மிகவும் ஆரவாரமாக இருக்கிறார்.
பேட்டிங்கில் கோலி அதிகம் சாதித்துள்ளார் என ஒப்புக்கொண்ட ஹைடன், ஆனால், கோலியுடன் ஒப்பிடும்போது பாபர் மிகவும் இளம் வயதாக இருப்பதாக குறிப்பிட்டார்.
பாபர் ஒரு இளம் கேப்டனாக இருக்கிறார், அவர் தினமும் கற்றுக்கொள்கிறார் மற்றும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன் உடையவர்.
பந்தை தொடர்ந்து உறுதியாக அடிக்கும் பாபர் அசாமிடம் இருக்கும் திறமையை இதுவரை எந்த வீரரிடமும் நான் பார்த்ததில்லை என ஹைடன் புகழ்ந்துள்ளார்.