அந்த வீரர் சதமடிக்கவில்லை என்றால் ஆடையின்றி மைதானத்தில் நடப்பேன் - ஹைடன் பேச்சு
ஆஷஸ் தொடரில் அவர் சதமடிக்கவில்லை என்றால் மைதானத்தில் ஆடையின்றி நடப்பதாக ஹைடன் பேசியுள்ளார்.
ஆஷஸ் தொடர்
வரும் நவம்பரில் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது.
இதுவரை ஆஷஸ் தொடரில், இரு அணிகளும் 73 போட்டிகளில் விளையாடி, அதில் 34 போட்டிகளில் அவுஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது.
2011 ஆம் ஆண்டுக்கு பின்னர், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒருமுறை கூட தொடரை கைப்பற்றவில்லை.
ஹைடனின் சவால்
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ஜோ ரூட், இதுவரை அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் அடித்தது கூட இல்லை.
இந்நிலையில், இந்த ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் சதமடிக்கவில்லை என்றால் நான் மைதானத்தில் ஆடையின்றி நடப்பேன் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மாத்தியூ ஹைடன் பேசியுள்ளார்.
அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தயவு செய்து ஒரு சதம் அடித்து விடுங்கள் ஜோ ரூட் என அந்த அந்த வீடியோவில் ஹைடன் மகள் கிரேஸ் ஹைடன் கமெண்ட் செய்துள்ளார்.
ஜோ ரூட் இதுவரை, 144 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 30 சதம், 69 அரைசதம் உட்பட 13,543 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |