ஆபத்தான வீரர்.. உலகக்கோப்பைக்கு தெரிவு செய்யுங்கள்: அவுஸ்திரேலிய முன்னாள் வீரர்
ஐதராபாத் அணி வீரர் ராகுல் திரிபாதியை உலககோப்பை அணிக்கு தெரிவு செய்ய வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் தெரிவித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர் தோல்விகளால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. ஆனால் அந்த அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ராகுல் திரிபாதி.
அவர் நடப்பு தொடரில் 13 போட்டிகளில் 393 ஓட்டங்கள் விளாசியுள்ளார். ஆனாலும் அவர் இந்திய அணிக்காக இதுவரை தெரிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், திரிபாதியை வெகுவாக பாராட்டியுள்ள அவுஸ்திரேலிய முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹேடன், இந்திய அணிக்கு அவரை தெரிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Photo Credit: BCCI/IPL
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'திரிபாதி பொறுப்புடன் விளையாடும் விதம் அற்புதமாக உள்ளது. கடினமாக முன்னோக்கி செல்லும் அவரது திறனை நான் பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் சர்வதேச அளவில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் அவரிடம் உள்ளது. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதம் ஆபத்தானது. விக்கெட்டின் இருபுறமும் விளையாடுவதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளை நிதானமாக விளையாடும் அவரது திறமை என்னை மிகவும் கவர்ந்தது.
நீங்கள் (இந்தியா) அவுஸ்திரேலியாவில் நடக்கு உலகக்கோப்பைக்கு அழைத்து செல்லுங்கள். ஏனெனில் அவர் அங்குள்ள பவுன்சி பிட்ச்சுகளில் அந்த அற்புதமான ஷாட்களை ஆட முடியும்' என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: IMDB