64 பந்தில் 132 ரன்கள்! ருத்ர தாண்டவம் ஆடிய கேப்டன்..வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்
மகளிர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.
எல்லிஸி பெர்ரி அதிரடி
சிட்னியில் அவுஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது. எல்லிஸி பெர்ரி 70 (46) ஓட்டங்களும், போஎபே 52 (19) ஓட்டங்களும் விளாசினார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஹேலே மேத்யூஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். அவருக்கு துணையாக ஸ்டாப்பினி டெய்லர் அதிரடியில் மிரட்டினார்.
இவர்களின் விஸ்வரூப ஆட்டத்தினால் ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. அரைசதம் கடந்த ஸ்டாப்பினி 41 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Stafanie Taylor gets in on the action and the West Indies are edging closer and closer to a remarkable win! #AUSvWI pic.twitter.com/HY4ffLfE9X
— cricket.com.au (@cricketcomau) October 2, 2023
ஹேலே மேத்யூஸ் சாதனை சதம்
எனினும் ஹேலே மேத்யூஸ் தெறிக்கவிட்டார். அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்த அவர் 53 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து மிரட்டிய அவர் 64 பந்துகளில் 132 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 20 பவுண்டரிகள் அடங்கும்.
எனினும் ஹேலேவின் விக்கெட்டை இழந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவர்களில் 213 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
Ridiculous hitting from Hayley Matthews and the West Indies are still in this contest!
— cricket.com.au (@cricketcomau) October 2, 2023
They need 90 runs from 47 balls to pull off a huge chase...#AUSvWI pic.twitter.com/5DAQ8wZcbc
வரலாற்று சாதனை
இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஸ்கோரை செஸ் செய்த அணி என்று வரலாற்று சாதனையை படைத்தது. சதம் அடித்ததுடன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய ஹேலே மேத்யூஸ் Player of the match விருதை வென்றார்.
Twitter (@cricketcomau)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |