சிக்ஸர் மழை! 52 பந்தில் 123 ஓட்டங்கள்..சரவெடியாய் வெடித்த வீராங்கனை
மேற்கிந்திய தீவுகள் அணி வீராங்கனை 52 பந்துகளில் 123 ஓட்டங்கள் விளாசி மிரள வைத்தனர்.
ருத்ர தாண்டவம்
ஆடிய வீராங்கனை மகளிர் டி20 தொடரான Fairbreak Globalயின் இன்றைய போட்டியில் வாரியர்ஸ் வுமன் மற்றும் பால்கான்ஸ் வுமன் அணிகள் மோதின.
முதலில் ஆடிய வாரியர்ஸ் அணியில் தொடக்க வீராங்கனை ஹேலே மேத்யூஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்ஸர்களை விளாசி வாணவேடிக்கை காட்டிய ஹேலே மேத்யூஸ், 52 பந்துகளில் 123 ஓட்டங்கள் குவித்தார். இதில் 9 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும்.
WHAT A KNOCK ✨✨
— Female Cricket (@imfemalecricket) April 16, 2023
Hayley Matthews smashes the joint highest individual score in FairBreak Invitational. Her knock included 11 4️⃣ s and 9 6️⃣ s ? #CricketTwitter #FairBreak #FBI23 pic.twitter.com/5TxdxYBlNG
அவருக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு வீராங்கனை கேத்தரின் பிரைஸ் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் வாரியர்ஸ் வுமன் அணி 4 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்கள் குவித்தது. அஞ்சு குருங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இமாலய வெற்றி
பின்னர் களமிறங்கிய பால்கன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக சமரி அதப்பத்து 29 ஓட்டங்களும், தீர்த்தா சதிஷ் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
வாரியர்ஸ் வுமன் தரப்பில் கேத்தரின் பிரைஸ் 3 விக்கெட்டுகளும், ஹேலே மேத்யூஸ் 2 விக்கெட்டுகளும், ஜெஸ் கெர் மற்றும் ஈஷா ரோஹிட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.