52 ஆண்டுகால கிரிக்கெட்டில் புதிய வரலாறு எழுதிய பெண் கேப்டன்! வலியுடன் விளையாடிவருக்கு குவியும் பாராட்டு

Sivaraj
in கிரிக்கெட்Report this article
மகளிர் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் வரலாற்று சாதனை படைத்தார்.
ஸ்கொட்லாந்து 244
லாகூரில் நடந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்கொட்லாந்து மகளிர் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஸ்கொட்லாந்து அணி 244 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. சாரா பிரைஸ் 55 ஓட்டங்களும், மேகன் மெக்கோல் 45 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஹேலே மேத்யூஸ் 4 விக்கெட்டுகளும், ஆலியா அல்லெய்னே மற்றும் கரிஷ்மா ரம்ஹராக் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கியானா ஜோசப் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த ஸைடா ஜேம்ஸ், அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் உடன் கைகோர்த்தார்.
ஹேலே மேத்யூஸ் சதம்
இந்தக் கூட்டணி 113 ஓட்டங்கள் குவித்தது. ஸைடா 45 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சதம் விளாசிய அவர் இறுதிவரை களத்தில் நின்று 114 ஓட்டங்கள் விளாசினார். ஆனால், ஏனைய வீராங்கனைகள் அவருக்கு கைகொடுக்காததால் மேற்கிந்திய தீவுகள் அணி 233 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.
A true fighter 💪🏾 Matthews reaches a century 💯 #CWCQ | #MaroonWarriors pic.twitter.com/SCov4WaBLd
— Windies Cricket (@windiescricket) April 9, 2025
ஆனாலும், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் புதிய வரலாறு படைத்தார்.
அதாவது, 52 ஆண்டுகால மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சதம் விளாசியதுடன், 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ஒரே வீராங்கனை இவர்தான்.
மேலும், தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஹேலே மேத்யூஸ் ரிட்டையர் ஹர்ட் பெற்று வெளியேறினார். ஆனால் விக்கெட் வீழ்ந்த அடுத்த பந்தே களத்திற்கு வந்து சதம் அடித்தார்.
A crucial 4-wicket haul from the Skipper vs. Scotland 👏🏽 Making breakthroughs and keeping us in the game 💪🏾#CWCQ | #MaroonWarriors pic.twitter.com/ZfkPR0jHEe
— Windies Cricket (@windiescricket) April 9, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |