விபத்தை ஏற்படுத்திய நீதிபதி மகன் வழக்கு: நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி
Kerala judge whose minor son killed scooter rider in Mercedes crash gets HC relief: நீதிபதி ஒருவருடைய மகன் ஏற்படுத்திய விபத்து உயிர் பலி வாங்கிய வழக்கில், நீதிபதிக்கு நீதிமன்றம் ஆதரவு
கேரளாவில், நீதிபதி ஒருவருடைய மகன் ஏற்படுத்திய விபத்து உயிர் பலி வாங்கிய வழக்கில், நீதிபதிக்கு நீதிமன்றம் ஒன்று ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய நீதிபதியின் மகன்
ஞாயிற்றுக்கிழமையன்று, கேரளாவிலுள்ள சேரநல்லூர் என்னுமிடத்தில், தன் உணவகத்தை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் ஜெய பாலகிருஷ்ணன் (55) என்பவர்.

அப்போது வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பின்னாலிருந்து மோத, தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காரை ஓட்டியவர் நீதிபதி ஒருவரின் மகன். அந்த இளைஞரைக் கைது செய்த பொலிசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளார்கள். பின்னர் அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணனின் மகள், தனக்கு பொலிசார் மீது நம்பிக்கை இல்லை என்றும், தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான அந்த இளைஞரையும் அவரது தந்தையான நீதிபதியையும் தப்ப விடமாட்டேன் என ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தியவர் 18 வயதுக்குக் கீழுள்ளவர் என்பதால், அவரது தந்தை மீது வழக்குத் தொடர கேரள உயர்நீதிமன்றத்தில் பொலிசார் அனுமதி கோர, உயர்நீதிமன்றம் அந்த நீதிபதி மீது வழக்குத் தொடர அனுமதியளித்தது.
நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி
சம்பந்தப்பட்ட இளைஞரின் தந்தையான நீதிபதி, கேரளா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார்.
அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய கேரளா உயர்நீதிமன்றம், அவரைக் கைது செய்யவேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளது.
அவர் ஒரு நீதிமன்ற அலுவலர், அவர் விசாரணையில் ஒத்துழைப்பு அளிப்பார் என்று கூறியுள்ள நீதிமன்றம், பொலிசார் அவரைக் கைது செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளது.