கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை தற்காலிகமே - நீதிமன்றம் சொல்வது என்ன?

Vijay Madras High Court Karur Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Jul 10, 2026 07:22 AM GMT
Report

கரூர் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசுபணியே வழங்க வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அரசுப்பணி வழங்க எதிர்த்து வழக்கு

தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று தனியார் ஆலைக்கு அடிக்கல் நாட்டுவது மக்கள் சந்திப்பு என என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள கரூர் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 

கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை தற்காலிகமே - நீதிமன்றம் சொல்வது என்ன? | Hc Says Govt Job For Karur Victims Is Temporary

இன்று நடைபெறும் நிகழ்வில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் அரசுப்பணிக்கான ஆணையை வழங்க உள்ளார்.

அரசுப்பணி வழங்க, நாம் தமிழர், திமுக, அமமுக, புதிய தமிழகம் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசுப்பணி வழங்க தடை விதிக்கக்கோரிய வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

திமுக, தவெக ஒரே அணியில் இணைய வேண்டும் - திருமாவளவன் சொல்லும் காரணம்

திமுக, தவெக ஒரே அணியில் இணைய வேண்டும் - திருமாவளவன் சொல்லும் காரணம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசு பணி வழங்குவதில் என்ன தவறு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு வேலை தற்காலிகமே - நீதிமன்றம் சொல்வது என்ன? | Hc Says Govt Job For Karur Victims Is Temporary

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பணி எதற்கு?

உச்சநீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்குவது சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பாக அமையும்.

எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும், இவ்வாறு நடந்தால் அரசுப்பணி கோர வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் நடத்த கும்பகோணம் மகாமகம் நிகழ்வு, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களுக்கு யாருக்கும் அரசுப்பணி வழங்கப்படவில்லை.

கருணை அடிப்படையில் பணி வழங்கும் விதிமுறைகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை. இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களுக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும்.

இவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு ஏமாற்றமாக அமையும்" என்ற வாதங்களை முன்வைத்தார்.

தற்காலிக பணி நியமனம்

வாதங்களை கேட்ட நீதிபதி, "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆனால் அந்த பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். ஆனால், அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.

  மேலும், டின்பிஎஸ்சியை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கின் விசாரணையை ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US