இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் IT ஊழியர்! மிரள வைத்த தமிழர்
இந்திய அளவில் அதிக ஊதியம் பெறும் நபராக HCLயின் தலைமை செயல் அதிகாரி சி.விஜயகுமார் உள்ளார்.
முன்னணி IT நிறுவனமான HCL இந்த ஆண்டுக்கான அதிக சம்பளம் பெறும் ஊழியர் குறித்து அறிவித்துள்ளது.
HCL 2024 அறிக்கையின்படி அந்நிறுவனத்தின் CEO விஜயகுமார், தனது வருடாந்திர ஊதியத்தை ஒரு பகுதியாக 10 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் 84.16 கோடி) ஈட்டினார்.
இந்த ஊதியமானது அவரது முந்தைய ஆண்டு வருவாயில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நடப்பு நிதியாண்டில் ஒரு இந்திய IT நிறுவனத்தில் அதிக ஊதியம் வாங்கும் CEO ஆக, HCLTechயின் தற்போதைய நிர்வாக இயக்குநராகவும் உள்ள சி.விஜயகுமார் உருவெடுத்துள்ளார்.
1994ஆம் ஆண்டு HCL உடன் தனது பயணத்தை தொடங்கிய சி.விஜயகுமார், அப்போது ஒரு மூத்த தொழில்நுட்ப பொறியாளராக இருந்தார். இவரது அடிப்படை ஊதியம் ரூ.16.39 கோடியாக உள்ள நிலையில், போனஸ் மட்டுமே ரூ.9.53 கோடி பெற்றார்.
மேலும் நீண்டகால ஊக்கத்தொகையின் ரொக்க கூறு ரூ.19.54 ஆகும். அத்துடன் LTI - RSUகளின் பெர்கியூசிட் மதிப்பு ரூ.38.15 கோடி ஆகும்.
சி.விஜயகுமாரின் சம்பளமானது 2023யில் இருந்து கணிசமாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது அவர் ரூ.28 கோடி ஊதியம் பெற்றார்.
இதுமட்டுமன்றி சலுகைகள், அலவன்ஸ்கள் மூலமாக மட்டுமே ரூ.33 லட்சம் பெறுகிறார். தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் சி.விஜயகுமார், 2016ஆம் ஆண்டில் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |