HDFC மற்றும் SBI... எந்த வங்கியில் Personal Loan Interest Rate குறைவு?
Personal Loan Interest Rate வங்கிக்கு வங்கி மாறுபடும் நிலையில் எச்.டி.எஃப்.சி மற்றும் எஸ்.பி.ஐ வங்கிகளில் குறைவான வட்டி விகிதம் எதில் உள்ளது என்பதை பார்க்கலாம்.
பொதுவாக வட்டி விகிதங்கள் (Interest Rate) பெறப்படும் தொகை மற்றும் செலுத்தப்படும் காலம் உள்ளிட்டவற்றை பொறுத்து மாறுபடுகின்றன.
தற்போதைய காலத்தில் தனி நபர் கடன்கள் (Personal Loan) வங்கிகளில் எளிதாக கிடைக்கின்றன. பல்வேறு வங்கிகள் இன்ஸ்டா பெர்சனல் லோன்கள் (Insta Personal Loans) வழங்குகின்றன.
இந்த தனி நபர் கடன்களின் வட்டிவிகிதமானாது மெட்ரோ, நகரம், கிராமம் வங்கிகளை பொறுத்து மாறுபடும். மேலும், கடன் தொகையை பொறுத்தும் Interest Rate பெறப்படும்.
டாடா கேப்பிட்டல் (Tata Capital)
டாடா கேப்பிட்டல் (Tata Capital) நிறுவனத்தில் ஆண்டுக்கு 10.99 % வட்டி விதிக்கப்படும். ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ஆனது 5 ஆண்டுகளுக்கு ரூ.10,869 முதல் தொடங்குகிறது.
மேலும், ரூ.1 லட்சத்துக்கு ரூ.2,174 முதல் தொடங்குகிறது. செயலாக்கக் கட்டணம் கடன் (Credit processing fee) தொகையில் 5.5% வரை இருக்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ஆண்டுக்கு 11.15% முதல் 15.30% வரை வட்டி விகிதங்கள் விதிக்கப்படும். ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ஆனது 5 ஆண்டுகளுக்கு ரூ.10,909 முதல் ரூ.11,974 வரையிலும் இருக்கும்.
ரூ.1 லட்சம் கடனுக்கான EMI ஆனது ரூ.2,182 முதல் ரூ.2,395 வரையிலும் இருக்கும். மேலும், செயலாக்கக் கட்டணம் 1.5% வரை மாறுபடும். அதாவது குறைந்தபட்ச தொகை ரூ.1000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ.15,000 ஆகும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC)
ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் (HDFC) ஆண்டுக்கு 10.50% முதல் வட்டி விகிதம் தொடங்குகிறது. ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ஆனது 5 ஆண்டுகளுக்கு ரூ.10,747ல் இருந்து தொடங்குகிறது.
ரூ.1 லட்சம் கடனுக்கான EMI ஆனது ரூ.2,149 முதல் தொடங்குகிறது. இந்த வங்கியில் செயலாக்கக் கட்டணம் கடன் (Credit processing fee) ரூ.4,999 வரை இருக்கலாம்.