HDFC வங்கி வாடிக்கையாளரா நீங்கள்! உங்களுக்கான முக்கிய அறிவிப்பு
எச்.டி.எப்.சி (HDFC) வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
HDFC வங்கி அறிவிப்பு
எச்.டி.எப்.சி வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வங்கியின் சேவை பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு தலா இரண்டு மணி நேரத்திற்கு யுபிஐ (UPI) உள்ளிட்ட சேவைகள் இயங்காது என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 5 மற்றும் 23ம் திகதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை HDFC வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ (UPI) உள்ளிட்ட சேவைகள் செயல்படாது.
அதாவது இந்த பராமரிப்பு நேரத்தில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பரிவர்த்தனைகள் செயல்படாது.
மேலும், ரூபே (Rupay) கிரெடிட் கார்டு (credit card) பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங் (mobile banking), ஜி பே (G Pay) , வாட்ஸ் அப் பே (WhatsApp Pay), பேடிஎம் (Paytm), மொபிக்கிவிக் (MobiKivic) உள்ளிட்ட சேவைகளும் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்கு இயங்காது.
அதோடு, இந்த காலத்தில் எச்டிஎப்சி வங்கியின் பிற இணையதள சேவைகளும் இயங்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |