ரூ.500க்கு குறைவான UPI பரிவர்த்தனைக்கு SMS வராது - HDFC வங்கி அறிவிப்பு
hdfc to stop sms notifications for upi transaction below 500rs from 2027: ரூ.500க்கு குறைவான UPI பரிவர்த்தனைக்கு 2027 ஜனவரி 1 முதல் SMS அறிவிப்புகள் வராது என HDFC வங்கி அறிவித்துள்ளது.
HDFC வங்கியின் SMS கட்டுப்பாடு
டீ கடையில் பணம் செலுத்துவது தொடங்கி அனைத்திற்கும் Googlepay, Phonepe, paytm போன்ற UPI செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

UPI பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 1 ரூபாய் உங்கள் வாங்கி கணக்கிலிருந்து அனுப்பப்பட்டால் கூட வங்கியிடமிருந்து அது தொடர்பான அறிவிப்புகள் SMS, மின்னஞ்சல் மூலம் வரும்.
இந்நிலையில், HDFC வங்கியானது 2027 ஜனவரி 1 முதல் ரூ.500க்கும் குறைவான UPI பரிவர்த்தனைக்கு அனுப்பப்படும் SMS அறிவிப்புகளை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

SMS அறிவிப்புகள் நிறுத்தப்பட்ட போதிலும், அனைத்து UPI பரிவர்த்தனைகள் தொடர்பான மின்னஞ்சல் அறிவிப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பெறுவார்கள். அதற்கு எந்த கட்டணமும் கிடையாது என தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்குமாறு ஆறிவுறுத்தியுள்ளது.