கனடாவில் உங்களுக்காக காத்திருக்கும் 900,000 பணியிடங்கள்: ஜூலை மாதத்தில் வெளியாகும் மிகப்பெரிய நல்ல செய்தி
ஜூலை மாதத் துவக்கத்தில், மீண்டும் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதைத் துவங்க இருக்கிறது கனடா அரசு.
கனடா, இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
இத்திட்டம், மேலும் அதிக புலம்பெயர்வோர் கனடாவுக்கு புலம்பெயர அனுமதிக்கும். திறன்மிகுப் பணியாளர்களை வரவேற்கும் பெடரல் அரசின் முக்கியத் திட்டம் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பதால், இது கனடாவுக்கு புலம்பெயரும் கனவிலிருப்போருக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாகும்.
ஆக, நீங்கள் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கான முயற்சிகளில் இறங்கும் நேரத்தில், கனடாவுக்கு புலம்பெயர்வதால் என்னென்ன நன்மைகள் என்பதைப் பார்க்கலாமா?
1. வேலைவாய்ப்புகள்
கனடாவில் நீண்ட காலமாகவே பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டு வருகிறது. அது பெருந்தொற்று காலகட்டத்தால் மேலும் அதிகரித்துள்ளது.
கனடாவில் கிட்டத்தட்ட 900,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
2. நிலையான அரசியல் அமைப்பு
கனடா மிகவும் ஸ்திரத்தன்மை வாய்ந்த ஜனநாயக நாடாக கருதப்படும் நாடாகும். கடந்த ஆண்டு, சிறந்த நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம் வகிப்பதாக அமெரிக்கா செய்தி வெளியிட்ட நிலையில், கனடா வாழ்க்கைத் தரத்திலும், சமூக நோக்க அளவையிலும் உச்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தது.
3. பாதுகாப்பு
உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் நாடு கனடா. Berkshire Hathaway Travel Protection என்னும் காப்பீட்டு அமைப்பு வெளியிட்ட பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கனேடிய நகரமான மொன்றியல், உலகிலேயே பாதுகாப்பான நகரமாக அந்த அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
4. இலவச மருத்துவ வசதி
கனடா தனது குடிமக்களுக்கும், கனேடிய நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களுக்கும் இலவச மருத்துவ வசதி வழங்குகிறது.
5. தரமான கல்வி
புலம்பெயர் மாணவர்கள், மற்ற மாணவர்களை விட வாசித்தலில் சிறந்துவிளங்குவதாகவும், கனேடிய மாணவர்கள் மற்ற பொருளாதார கூட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நாடுகளைவிட வாசித்தலில் சிறந்து விளங்குவதாகவும் அந்த அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவில் பலதரப்பட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அமைந்துள்ளன. உலகிலுள்ள மிகச்சிறந்த 100 பல்கலைகக்ழகங்களில் சில கனடாவில் உள்ளன.
6. கலாச்சாரப் பன்முகத்தன்மை
1988ஆம் ஆண்டு கனடா கலாச்சாரப் பன்முகத்தன்மை சட்டத்தை உலகிலேயே முதன்முதலாக கொண்டுவந்த நாடுகளில் ஒன்றானது. இது கனடா பலதரப்பட்ட மக்களையும் வரவேற்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது.
7. நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்தல் திட்டங்கள்
கனடாவுக்கு புலம்பெயர்வதற்காக அந்நாட்டில் பொருளாதார வகுப்பில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்தல் திட்டங்கள் உள்ளன.
இந்நிலையில், ஜூலை மாதத் துவக்கத்தில், கனடா அரசு மீண்டும் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதைத் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.