சுவிட்சர்லாந்தில் சொந்த தந்தையால் இளவயது மகளுக்கு ஏற்பட்ட துயரம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் 16 வயது மகளை சொந்த தந்தையே சீரழித்துள்ள சம்பவத்தில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
சூரிச் மாநிலத்தின் Winterthur நகரிலேயே தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2018 செர்பியாவில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் மது போதையில் இருந்த அந்த தந்தை தமது மகளை சீரழித்துள்ளார்.
தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கு திரும்பிய பின்னரும் அந்த இளம் பெண் தந்தையால் துயரங்களை அனுபவித்து வந்துள்ளார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்துள்ள அந்த தந்தை, குடும்பத்தில் இருந்து தம்மை வெளியேற்ற தாயாரும் மகளும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தும் நாடகம் இது என்றார்.
தற்போது 41 வயதாகும் அந்த செர்பியா நாட்டவர், கடந்த 2016ல் தகாத எண்ணத்துடன் மகளை நெருங்கியதாக கூறி கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்ற நிலையில், குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக புகாரை திரும்பப்பெற்றுக்கொண்டார் அவரது மகள்.
மட்டுமின்றி, அவ்வாறான ஒரு செயல் தமது பக்கத்தில் இருந்து நடக்கவில்லை எனவும், இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமானது என குறிப்பிட்டார்.
மேலும், தன் மீது மனைவியும் மகளும் இணைந்து பழி தீர்ப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள், 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது உளவியல் பாதிப்பால் சிகிசையில் இருந்து வரும் குறித்த இளவயது பெண்ணுக்கு இழப்பீடாக 90,000 பிராங்குகள் அளிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.