இவர் ஒரு சூப்பர் ஸ்டார்..! பேட் கம்மின்ஸ் பகிர்ந்த புகைப்படம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் பேட் கம்மின்ஸ் சக அணி வீரர் வெங்கடேஷ் ஐயரை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளில் சோபிக்காததால் வெங்கடேஷ் ஐயர் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி இருந்தது.
ஆனால் மும்பைக்கு எதிரான போட்டியில் அவர் அரை சதம் விளாசி அசத்தினார். அதே போட்டியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் களமிறங்கிய பேட் கம்மின்ஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்தார்.
வெங்கடேஷ் ஐயர் - பேட் கம்மின்ஸ் கூட்டணி 6வது விக்கெட்டுக்கு 51 ஓட்டங்கள் சேர்க்க, கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயரின் ஆட்டத்தை பாராட்டும் வகையில், அவருடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பேட் கம்மின்ஸ் அவரை 'சூப்பர் ஸ்டார்' என புகழ்ந்துள்ளார்.
This guy is a superstar @venkateshiyer ? pic.twitter.com/wUwOoHNOgl
— Pat Cummins (@patcummins30) April 7, 2022