பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்!
பிரித்தானியாவில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய பிரதமரும் ஆக இருக்கிறார் லிஸ் ட்ரஸ்.
பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் பிரதமர் பதவிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைமைக்கான போட்டி நடைபெற்றது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகுபவரே பிரித்தானியாவின் பிரதமராகவும் அறிவிக்கப்படுவது முறைமையாகும்.
ஆக, பலர் பிரதமருக்கான போட்டியில் களமிறங்க, கடைசி சுற்று வரை, பிரித்தானிய வெளியுறவுச் செயலரான லிஸ் ட்ரஸ்ஸும், முன்னாள் சேன்சலரான ரிஷி சுனக்கும் களத்தில் நின்றார்கள்.
இந்நிலையில், போட்டியில் வென்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ளார் லிஸ் ட்ரஸ். கட்சியின் தலைவரே பிரதமாரகவும் அறிவிக்கபடுவார் என்பதால், லிஸ் ட்ரஸ் பிரித்தானியாவின் பிரதமராகவும் ஆக இருக்கிறார்.
நாளை (6.9.2022) செவ்வாய்க்கிழமை, பிரதமர் இல்லத்தின் சாவி (Number 10 Downing Street) லிஸ் ட்ரஸ்ஸிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிஸ் ட்ரஸ், தென்மேற்கு Norfolk பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.