இன்று நான் இங்கு நிற்பதற்குக் காரணம் அவர்தான்: பிரித்தானிய பிரதமர் ரிஷி புகழும் நபர்
பிரித்தானிய பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக் தன் குடும்ப உறுப்பினர்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர்.
தான் அரசியலுக்குள் நுழைவதற்கே தன் குடும்பத்தில் உள்ள ஒருவர்தான் காரணம் என்று கூறியிருக்கிறார் அவர்.
ரிஷி, Goldman Sachs, hedge fund ஆகிய நிறுவனங்களில் முன்பு பணியாற்றியவர். நான் இப்படிப்பட்ட பணிகளைச் செய்வதற்கு என் மாமனார்தான் காரணம் என்று ஒருமுறை கூறியுள்ளார் ரிஷி.
ஒரு மனிதர், இவ்வளவு வெற்றிகரமான மனிதர், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும், ஒரு நாட்டையே மாற்றிய ஒரு நிறுவனத்தை உருவாக்கியவர் என, எனது மாமனாரைக் குறித்து எண்ணும்போது, பிஸினஸ் மூலம் உலகின்மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்க முடிகிறது என்று எண்ணியிருந்தேன்.
ஆனால், அவரோ, நீங்கள் உலகத்தின்மீது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், அதற்கான வழி அரசியல்தான் என்று கூறினார் என்று கூறும் ரிஷி, அவர் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்தார், என்னை உற்சாகப்படுத்தினார். அதனால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன் என்கிறார்.
ரிஷியின் மாமனாரான, அதாவது ரிஷியின் மனைவி அக்ஷதாவின் தந்தையான நாராயண மூர்த்தி, இன்ஃபோசிஸ் என்னும் பிரம்மாண்ட நிறுவனத்தை நிறுவியவர் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.