பிரித்தானியாவில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான பகுதிகள் இவைதான்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
பிரித்தானியாவில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அதிக திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறும் மிகவும் ஆபத்தான இடங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் மக்கள் வாழ மிகவும் ஆபத்தான இடமாக கிளேவ்லேண்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இங்கு ஒவ்வொரு 1000 மக்களில் 99.4 வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த வெஸ்ட் யார்க்ஷைர் இந்த ஆண்டு குற்றங்களின் அடிப்படையில் இரண்டாம் இடத்திற்கு இறங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து சவுத் யார்க்ஷைர், டர்ஹாம், ஹம்பர்சைடு, கென்ட், கிரேட்டர் மேன்செஸ்டர் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
முக்கியமாக, பிரித்தானியாவின் தலைநகரமான லண்டன், 1000 மக்களில் 80.3 (பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட) குற்றங்களுடன் 8-வது இடத்தில் உள்ளது.
குறைந்த வன்முறைக் குற்றங்களுடன் (1000 மக்களில் 45.8 குற்றங்கள்) நார்த் யார்க்ஷைர் நகரம் பிரித்தானியாவில் மக்கள் வாழ சிறந்த பகுதியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து Devon and Cornwall, Dyfed-Powys, Wiltshire மற்றும் Surrey ஆகிய நகரங்கள் மக்கள் வாசிக்க ஏற்ற இடமாக அடுத்த 4 இடத்தைப் பிடுத்துள்ளன.
சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 'தி சன்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த விவரங்களின் முலம், பிரித்தானியாவில் மக்கள் வாழ ஏற்ற இடங்களையும், மிகவும் அச்சுறுத்தலான இடங்களையும் அறிந்துகொள்ளலாம்.
