அண்ணாமலை பட பாணியில்.., எருமை மாடுகளை எம்எல்ஏ அலுவலகத்திற்கு கொண்டு வந்த நபர்
மாட்டு கொட்டகையை இடித்ததால் நபர் ஒருவர் எம்எல்ஏ அலுவலகம் முன்பு எருமை மாடுகளுடன் போராட்டம் நடத்தியுள்ளார்.
எருமை மாடுகளுடன் போராட்டம்
இந்திய மாநிலமான தெலங்கானா, பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்த தம்பதியினர் ஓடேலு மற்றும் லலிதா. இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சிங்கரேணி அரசு மருத்துவமனை அருகில் வசித்து வருகின்றனர்.
இவர், தனது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்வதற்காக மாட்டுக்கொட்டகையை இடிக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
இதற்கு ஓடேலு எந்த பதிலும் அளிக்காததால் நேற்று பொலிஸ் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள் மாட்டுக்கொட்டகையை இடித்து தள்ளினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் அங்குள்ள எம்.எல்.ஏ அலுவலக வளாகத்திற்கு எருமை மாடுகளை கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் எம்.எல்.ஏ தூண்டுதலின் பேரில் தான் தனது மாட்டு கொட்டையை இடித்து விட்டதாக கூறி போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் அவரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது அவர் தன்னிடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். உடனே பொலிஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதித்தனர்.
மேலும் தொடர்ந்து போராட்டம் நடத்திய லலிதா மற்றும் அவரது உறவினரை பொலிஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |