டோனி ரெக்கார்ட் எல்லாம் இவர் அசால்ட்டா காலி பண்ணிருவாரு! இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய இன்சமாம் உல் ஹக்
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் வருங்காலத்தில், டோனி, கில்கிறிஸ்ட் சாதனைகளை பின்னுக்கு தள்ளிவிடுவார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று தொடரிலும், இளம் வீரர் ரிஷப் பாண்ட் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து, இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
முன்பு இருந்த ரிஷப் பண்ட்டின் ஆட்டத்திற்கும், இப்போது இருக்கும் அவரின் ஆட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது என்று முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக், நான் பண்டை கடந்த ஏழு எட்டு மாதமாக கவனித்து வருகிறேன்.
அவரது ஆட்டம் மிக அபாரமாக மற்றும் தனித்து இருக்கிறது. இவர் ஆடி வருவதை நான் இதற்கு முன்பு ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் டோனி இடம் கண்டுள்ளேன்.
அவர்களைப் போலவே மிக அதிரடியாக ஆடி அணியின் போக்கே அப்படியே திசை திருப்பும் ஆற்றலுடைய வீரராக ரிஷப் பண்ட் திகழ்ந்து வருகிறார்.
மூன்று வகை கிரிக்கெட் பார்மேட்டுகளிலும் ரிஷப் பண்ட் நாளுக்கு நாள் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் மற்றும் கீப்பிங்கிலும் தனது திறமையை எல்லோருக்கும் காண்பித்துக் கொண்டு இருக்கிறார்.
ரிஷப் பண்ட் இப்படியே சில காலங்களுக்கு தனது ஆட்டத்தை சிறப்பாக தொடர்ந்தால் நிச்சயம் பின்னாளில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் டோனியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி விடுவார் என்று கூறினார்.
