சிக்ஸர் மழைபொழிந்த இருவர்! 9 ஓவரிலேயே 167 ஓட்டங்கள் இலக்கை எட்டிய SRH..நொறுங்கிய லக்னோ அணி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியை துவம்சம் செய்தது.
ஆயுஷ் பதோனி அதிரடி
நடப்பு ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் SRH மற்றும் LSG அணிகள் மோதின. முதலில் ஆடிய லக்னோ அணியில் டி காக் (2), ஸ்டோய்னிஸ் (3) ஆகிய இருவரையும் புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார்.
The @SunRisers fielding display has been ? notch so far! ?#LSG lose Marcus Stoinis inside the powerplay.
— IndianPremierLeague (@IPL) May 8, 2024
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #SRHvLSG pic.twitter.com/7AO2rPUXBJ
பின்னர் ராகுல் 29 (33) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, க்ருணால் பாண்டியா 24 ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் ஆயுஷ் பதோனி அதிரடியாக 30 பந்தில் 55 ஓட்டங்களும், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 48 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ஹெட், அபிஷேக் வாணவேடிக்கை
அடுத்து சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு, மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினர்.
Just one of those Travis Head starts ??#SRH 64/0 already in the chase!
— IndianPremierLeague (@IPL) May 8, 2024
Watch the match LIVE on @StarSportsIndia and @JioCinema ??#TATAIPL | #SRHvLSG pic.twitter.com/I91EkXCmvq
ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். அதன் பின்னரும் அவரது ஆட்டத்தில் வேகம் குறையவில்லை. அதேபோல் அதிரடி அரைசதம் விளாசிய அபிஷேக்கும் ருத்ர தாண்டவம் ஆடினார்.
இவர்களின் ஆட்டத்தினால் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்து, 9.4 ஓவரில் 167 ஓட்டங்கள் எடுத்தது SRH இமாலய வெற்றி பெற்றது.
A stylish strike to end a stylish chase!
— IndianPremierLeague (@IPL) May 8, 2024
Simply special from the #SRH openers ?
Recap the match LIVE on @StarSportsIndia and @JioCinema ??#TATAIPL | #SRHvLSG pic.twitter.com/2xUlOlS1kk
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |