தினமும் தலைக்கு குளித்தால் பிரச்சினை வருமா? அலசுவோம்
இன்றைய காலக்கட்டத்தில் தலைமுடிப் பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. முடி வளர்ச்சியை வைத்துதான் உங்கள் உடல் உட்புறத்தில் என்ன நடக்கிறது என்று கணிக்க முடியும்.
சரியான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டாலோ அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு இருந்தாலோ தலைமுடி உதிர்வு ஏற்படும். தலைக்கு ரசாயனம் கலந்த ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது, அதிக சூடான வெந்நீரில் குளிப்பது, ஹேர் டிரையர் பயன்படுத்துவது, ப்ளீச் செய்வது, தலைச்சாயம் பூசுவது இவற்றையெல்லாம் செய்தால் கண்டிப்பாக முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும்.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களும் இப்பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள். 30 வயது ஆவதற்குள் தலை முடி உதிர்ந்து சிலர் வழுக்கையும் விழுந்து விடுகிறது. முடிந்தவரை தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதே நல்லது. தலைமுடியை இயற்கையான வழியில் பராமரித்து வந்தாலே இப்பிரச்சினையிலிருந்து நாம் மீண்டு விடலாம்.
சரி வாங்க... தினமும் குளித்தால் தலைமுடி உதிருமா? அல்லது பிரச்சினை ஏற்படுமா? என்பது குறித்து பார்ப்போம் -
1. முடியின் தன்மை பொருத்து தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
2. தலையில் அரிப்பு, பொடுகு தொல்லை, அதிக வியர்வை ஏற்பட்டால் தினமும் தலைக்கு குளிக்கலாம்.
3. தலைமுடி வறண்டிருந்தாலோ, முடி கடினமாக இருந்தாலோ தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
4. வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு குளிப்பது தவறான விஷயம்.
5. ஷாம்பூவை அளவாக பயன்படுத்த வேண்டும்.
6. தலை குளிக்கும்போது நன்றாக அலச வேண்டும். தண்ணீர் மட்டும் ஊற்றிக்கொண்டு தலைக்கு குளித்தால் அழுக்கு தலையில் அப்படியே தேங்கி இருக்கும். இதனால் பிரச்சினை வரும்.
7. ரசாயன ஷாம்பூவை தவிர்த்தல் நல்லது.
8. டென்ஷன், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |