ஆஷஸ் டெஸ்டில் 69 பந்தில் சதமடித்த ஹெட்! நொறுங்கிய இங்கிலாந்து..இரண்டே நாளில் முடிந்த போட்டி
பெர்த்தில் நடந்த ஆஷஸ் முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அட்கின்சன் 37 ஓட்டங்கள்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களிலும், அவுஸ்திரேலியா 132 ஓட்டங்களிலும் ஆல்அவுட் ஆகின.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 164 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அட்கின்சன் 37 ஓட்டங்கள் எடுத்தார்.
மிட்செல் ஸ்டார்க், பிரெண்டன் டாக்கெட் தலா 3 விக்கெட்டுகளும், ஸ்கோட் போலண்ட் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 
டிராவிஸ் ஹெட் ருத்ர தாண்டவம்
அதனைத் தொடர்ந்து 205 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களிலேயே இலங்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 
69 பந்துகளில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் (Travis Head), 123 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கும். 
மார்னஸ் லபுசாக்னே ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார். பிரிடோன் கார்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |