உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து நடந்த பரபரப்பு! முக்கிய புள்ளிகள் ராஜினாமா
டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர்.
திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில், மதியம் 2.30 மணிக்கு பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.
மிஸ்பா-உல்-ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் இருவரும் திங்களன்று பிசிபி-க்கு தங்கள் முடிவுகளை தெரிவித்தனர்.
இதற்கிடையே, நியூசிலாந்து தொடருக்கான இடைக்கால பயிற்சியாளர்களாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் மற்றும் முன்னாள் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக் ஆகியோரை பாகிஸ்தான் நியமித்துள்ளது.
டி -20 உலகக் கோப்பைக்கான ஆதரவு ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.
டி -20 உலகக் கோப்பைக்கான ஆதரவு ஊழியர்கள் (தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சாளர்) விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்தது.
டி -20 உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தான் இந்நேரத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்தது சரியனாதில்லை என்பதை ஒப்புக்கொண்ட மிஸ்பா-உல்-ஹக், ஆனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இம்முடிவை எடுக்க வேண்டியிருந்தது என கூறினார்.
மிஷ்பா தனது முடிவை அவரிடம் தெரிவித்த பிறகு தானும் விலக முடிவு செய்ததாக வக்கார் யூனிஸ் கூறினார்.