கண்டிப்பாக இந்தியா உலகக்கிண்ணத்தில் எங்களை பழிதீர்க்கும்! அவுஸ்திரேலிய அணி வீரர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி தங்களை பழிவாங்கும் என்று கணித்துள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா
கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய அணியை அவுஸ்திரேலியா வீழ்த்தியது.
இந்த நிலையில் நடப்பு டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஒருவேளை மற்றொரு பாரிய தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருந்தால், அதனை எதிர்கொள்ள அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ஆர்வமாக உள்ளார்.
ஹெட் கணிப்பு
அவர் இந்திய அணி குறித்து ஹெட் பேசும்போது, எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா தங்கள் அணிக்கு எதிராக பழிவாங்க விரும்புகிறது என கணித்தார். அத்துடன் இரு அணிகளும் மற்றொரு இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
மேலும் அவர் கூறுகையில், ''இறுதிப் போட்டியில் விளையாடுவது நன்றாக இருக்கும். இந்தியாவில் உள்ள அனைவரும் அதை விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, கடந்த 2 இறுதிப் போட்டிகளில் என்ன நடந்தது என்பதைக் கருத்தில் கொண்டு, அதனால் இந்தியா ஒரு கட்டத்தில் பழிவாங்கும் என்று நான் நம்புகிறேன். அங்கே அப்படி இருந்தால் அதைச் சுற்றிலும் நல்ல காட்சியாக இருக்கும். நாங்கள் அதில் இருக்கிறோம் என்று நம்புகிறோம், நீங்கள் அதில் இருக்கிறீர்கள் என்று நம்புவோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |