இங்கிலாந்தில் தலையில்லாமல் கிடந்த பெண்ணின் சடலம்; பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸ்
இங்கிலாந்தில் ஒரு பிரதான சாலையில் தலையில்லாத பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
டெவோன் (Devon) மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான சால்கோம்பில் () காட்டுப்பகுதியில் உள்ள சாலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பொது மக்களில் ஒருவர் தகவல் கொடுத்ததை அடுத்து, அப்பகுதிக்கு வந்த டெவோன் பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்தனர்.
தற்போது, Devon and Cornwall பொலிஸ் அதிகாரிகள் இந்த விவரிக்கப்படாத மரணம் குறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக சம்பவ இடத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு படையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் Bennett சாலை இருபுறமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா வாசிகளுக்கு சற்று போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இறந்தவர் 1972-ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் Patricia Allen-ஆக இருக்கக்கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணை முன்வைக்கப்பட்டது. அனால், 100 சதவீதம் அது Patricia இல்லை என மூத்த காவல் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
கடந்த இரு நாட்களாக குறித்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், போலீசார் பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.